-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது

16 ஜன., 2010

புரூனையின் இரவுச் சந்தை

புருனையில் ரமழான் இலங்கையில் போன்றே கழிகின்றது..ஆனால் இங்கு மஸ்ஜித்களில் இப்தார் ஏற்பாடு செய்யும் வழமை இல்லை..கொகோகோலா ரமழானில் மலிவு விலையில் விற்கப் படுகின்றது.இங்கு அதிகமான சீன முஸ்லிம்கள் உள்ளனர்.அவர்கள் முஸ்லிம்கள் என்பதை ரமழானில் மட்டுமே அடையாளம் காணமுடியும்..இங்குள்ள எல்லா கடைகளிலும் சீன பெண்கள்தான் பணிபுரிகின்றனர்...ரமழானுக்கு முன்னர் அவர்கள் அரைகுறை ஆடைகளோடுதான் இருந்தனர்..முதல் ரமழான் அன்று அவர்களை ஹிஜாபுடன் பார்த்த போது ஆச்சரியப்பட்டேன்..ஹொஸ்டலுக்கு வந்த புரூனை நண்பன் ஆதியிடம் இது ரமழானுக்கு சுல்தான் போட்ட சட்டமா? என்று கேட்க இல்லை ரமழானில் எல்லோரும் திருந்தி விடுகின்றனர்..ரமழானை கண்ணியப்படுத்த வேண்டாமா? என்றான்..எங்கள் நாட்டில் ரமாழானுக்கு பள்ளிவாசல்கள் நிறைவதை நான் ஞாபகப்படுத்திக் கொண்டேன்..

இங்கும் தராவீஹ் தொழுவதற்கு பெண்கள் பள்ளிக்கு வருகின்றனர்.பள்ளிக்கு வரும் போது வெந்நிற ஹிஜாப் அணிந்தே வருவர்..பெரும்பாலான பெண்கள் தனியாக சொந்த வாகனங்களில் வருவர்.குடும்பத்தோடு வருவோரும் உண்டு..தராவீஹ் முடிந்த கையோடு ஹிஜாபை களைந்து டீசேர்ட் - டெனிமுக்கு மாறி விடுவர்..தராவீஹ் பின்னர் நிறைந்து வழியும் கடைத் தெருக்களில் இந்தக் கோலத்தில்தான் அவர்களை காணமுடியும்..எங்கள் நாடு எவ்வளோ மேல்!!
பள்ளிவாசல்களில் தராவீஹில் சிறுவர்கள் செட்டு சேர்ந்து விடுவார்கள்..நான் எட்டு ரக்கஅத் தொழுதுவிட்டு நண்பர்களுக்காக காத்திருக்கும் வேளைகளில் இவர்களின் குறும்புகளை ரசிப்பேன்..எல்லா இடங்களிலும் சிறுவர்களின் இயல்புகள் ஒன்றுபோலவே இருக்கின்றது...

அதே போல் இங்குள்ள இரவுச் சந்தைப் பற்றியும் இரண்டு வார்த்தை சொல்லியாக வேண்டும்..கடோங் பஸார் என்று அவ்விடத்தை அழைக்கின்றனர்..இங்கு புருனையனின் தேசிய உற்பத்திப் பொருட்களை மலிவு விலையில் வாங்கலாம்..விஸேஸமாக உணவுப் பொருட்கள்..எமது ஹொஸ்டலுக்கு 200 மீட்டர் தொலைவில்தான் இச்சந்தை உள்ளது.
ப்ரபா அயாமா? சிக்கன் எவ்வளவு - நான் வினவ '' சது ரிங்கிட்'' - ஒரு டொலர் என்றாள்..பொரித்த முழுக் கோழி - ஒரு டொலருக்கு லாபமல்லவா - 80 ரூபா...நான் வாங்கிக் கொண்டேன்..அன்று மலேசிய தல்ஹாவுடன் கடொங் சந்தைக்குப் போயிருந்தேன்...அவனது கணக்கில் கரும்புச் சாறும் , பொபய்னும் வாங்கித் தந்தான்...ஹ்ம் அங்கு மாங்காய்..வாழைப் பழம் துரியங்..எல்லாம் உண்டு...
என்றாலும் நான் அவதானத்துடன்தான் நடந்து கொண்டேன்..எங்காவது பாம்பு கறி தவளைக் கறி இருக்கிறதா?யாருக்குத் தெரியும் இந்த ஏரியாவில் -இது சகஜம்...திரும்பி வரும் போது தல்ஹாவிடம் கேட்டேன்..தாய்லாந்து..இந்தோனேசிய போன்று இங்கு பாம்புக் கறி உண்பவர்கள் இருக்கிறார்களா? யா..அஹ்கீ..கய்ப யும்கின் ..ஆஉலாஇ குல்லுவும் முஸ்லிமூன் - பயப்படாதே என்று தைரியமூட்டினான்.

2 கருத்துகள்: