புருனை நோன்புக்கும் இலங்கை நோன்புக்கும் அதிகம் வித்தியாசம் தெரியவில்லை..எம் நாட்டு குட்டிக் கிராமங்களில் தலை பிறையன்று கேட்கும் வெடில் சத்தம் இங்கும் கேட்டது..
முதல் நோன்பன்று தராவீஹ் தொழுவதற்கு சுல்தான் ஹஸன் பல்கிய்யா பெரிய பள்ளிவாசலுக்குச் சென்றேன்..இங்குள்ள பெரிய பள்ளிவாசல் அதுதான்..அதன் அழகை பார்த்துதான் ரசிக்க முடியும் ..வார்த்தையில் சொல்ல முடியாது..தங்க முலாம் பூசப்பட்ட நான்கு பெரிய குப்பாக்கள்..எட்டு மினாரா..பள்ளிவாசல் உள்ளே தங்கத்தால் எழுதப்பட்ட அல்குர்ஆன் வசனங்கள்..மின்னும் விளக்கொளியில் அப்பப்பா..ஆனால் இமாம்...நம் நாட்டு காரிகளுக்கு கிட்டத்திலும் வைக்க முடியாது..
சூறா யாஸினுக்கு இங்கு மிகப் பெரிய இடமுண்டு..முதல் தராஹீஹின் 20 ரக்கத்தும் யாஸினில் முடிந்தது..நம்மூரில் போன்று இங்கும்..அஸ்ஸலாத்துல் ஜாமிஆ..அல்லாஹூம்ம ஸல்லி..என்று ஒவ்வொரு இரண்டு ரக்கத்துகளுக்கிடையிலும் முஅத்தின் சத்தாமாய்..ராகத்தோடு ஓதுவார்..
பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஆதி இஸ்மத் பற்றி சில வார்த்தைகள் சொல்ல வேண்டும்..அவன் அஸல் அஜ்வத் அலியை போன்றிருப்பான்..புருனை மாணவர்களில் வித்தியாசமானவன்.கடந்த வெள்ளிக் கிழமை எம்மை தண்ணீர் மேல் இருக்கும் கிராமத்திற்கு கூட்டிச் சென்றான்..அதன் பெயர் தமோஹ் என்பது..அங்கு சுமார் 500 மேற்பட்ட வீடுகள்..அனைத்தும் தண்ணீரின் மேல் பலகையால் அமைக்கப்பட்ட வீடுகள்..புருனையின் ஆதிக் குடிகள் அவர்கள் என்று ஆதி விளக்கினான்.பலகை வீடுகள் என்றாலும் எல்லா வீடுகளுக்கும் ஏ.ஸீ, டீவி போன்ற வசதிகளை சுல்தான் செய்து கொடுத்துள்ளார்.
பெரியதொரு நதியின் மேலேயே அந்தக் கிராமம் அமைந்துள்ளது..ஸோ..நாங்கள் ஒரு வாடகை போர்ட்டில் அந்த கிராமத்தை சுற்றி வந்தோம்..கானா இத்ரீஸ் தண்ணீருக்குப் பயந்தவன்..எனவே அவன் போர்ட்டில் ஏறவில்லை..ஒரு ஆளுக்கு 50 சென்ட்(40ரூபாய்)
போர்ட்டில் போகும் போது இந்தோNனிசியாவைச் சேர்ந்த ஜமால் சரியான கூத்துப் போட்டான்..தண்ணீரில் கை நனைத்து விளையாடினான்..தண்ணீரை சுவைத்துப் பார்த்தான்.
ஆரம்பத்திலிருந்தே நான் தண்ணீரை தொடவில்லை..ஏனென்றால் எனக்குள் ஒரு சந்தேகம்..எல்லாம் முடிந்து கரையொதுங்கிய போது ஆதியிடம் கேட்டேன்..'' இவர்கள் கழிக்கும் மலம் சலம்..எங்கு விழும்?''
வேறெங்கே??ஆற்றில்தான் என்றான்..ஜமால் ஹொஸ்டலுக்கு வரும் வரை...குமட்டிக் கொண்டே வந்தான்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக