-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது

5 ஜன., 2010

ஏன் ''பனி விழும் பொழுது'' ??


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.



அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு மனம் கனிந்த ஸலாம் -

இந்த வலைப் பதிவை தொடங்குவதற்கு வாய்ப்பளித்த இறைவனுக்கே புகழ் அனைத்தும் . ''இறைவா எனக்கு பயனுள்ள அறிவைக் கற்றுத் தருவாயாக!! நான் கற்ற அறிவைக் கொண்டு பயன்பெறச் செய்வாயாக'' நான் அதிகம் கேட்கும் பிரார்த்தனை இதுதான்.

ஒரு கிராமத்துப் பையனாக வாழ்வைத் தொடங்கிய எனக்கு மனித வாழ்வின் யதார்த்தம் பற்றியும் இம் மண்ணில் நாம் செய்ய வேண்டிய பணி என்ன என்பதைக் கற்றுத் தந்த ஆசான்களுக்கும் - அனைத்துக்கும் மேலாக எந்த அறிவுப் பின்னணிகளும் அற்ற நிலையில் என் கல்வி வளரவே தம்மை முழுமையாக அர்ப்பணித்து உழைத்து உதவி புரிந்த என் தாய் தந்தையருக்கும் ஒரு கோடி நன்றிகள்.

பனி விழும் பொழுது என்று என் வலைப் பதிவுக்கு பெயர் வைத்திருக்கிறேன். - அழகு, சந்தோசம்,அமைதி என்பவைகளின் குறியீடே பனி விழும் பொழுது - மனிதர்கள் எப்போதும் யாசிக்கின்றவை இவை. துரதிஸ்டமாய் அரிதாகவே இன்று இவற்றை நாம் அனுபவிக்க முடிகின்றது. அல்லது சிலருக்கானதாக மட்டும் இன்று இவை மாறி விட்டன.

என்னைப் பற்றி பெரிதாக சொல்லிக் கொள்ள எதுவுமில்லை..என் தந்தை ஒரு தையல் காரர். சத்தியமாய் இது வரை எனக்கு ஊசியைக் கூட பிடிக்கத் தந்ததில்லை. 18 வருடங்கள் (என் கல்லூரி வாழ்க்கை முடியும் வரை) அவரின் உழைப்பிலேயே நானும் என் நான்கு சகோதர, சகோதரிகளும் படித்தோம்..அதிர்ஸ்டவசமாக எனக்கு புருனை அரசாங்கத்தின் புலமைப் பரிசில் கிடைத்தது. இப்போது ஷரீஆ துறையில் எம்.ஏ படித்துக் கொண்டிருக்கிறேன்.

எனக்கென்று நிறையவே நண்பர்கள் இருக்கிறார்கள் - என்னுடைய விஸயங்கள் அவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு சின்ன தஃவா முயற்சியாகவுமே ''பனி விழும் பொழுது'' வலைப் பதிவை ஆரம்பிக்கின்றேன்.

அன்புடன்

இஸ்மத் அலி
2010.01.05

3 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    இஸ்மத் மிக விரைவில் கருத்துக்களுடன் சந்திக்கிறேன்.இப்போதைக்கு வாழ்த்துக்கள்
    அன்புடன் நதீர்

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும்
    வாழ்த்துக்கள் இஸ்மத்.
    எல்லோருக்கும் பனி விழுவதுமில்லை எப்போதும் விழுவதுமில்லை. அவ்வப்போதான பரஸ்பர பகிர்தலில்தான் எல்லாம் இருக்கிறது. எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர எல்லைகளைத்தாண்டிய வெளியில் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி.கெக்கிறாவை இஸ்மத் எனும்போது றாபிதா சுவர்ப்பத்திரிகை நினைவுக்கு வருகிறது.. நிறைய இன்னும் பல படைப்புக்களை தருவீர்கள் என்ற எதிர்பார்புடன்..
    அல்லாஹ் எங்களின் எழுத்து இயக்கங்களை வாழ வைப்பானாக ஆமீன்.

    பதிலளிநீக்கு
  3. this effort should be appreciated.good luck.

    பதிலளிநீக்கு