-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது

28 மே, 2011

தஜ்ஜாலின் வருகையை மௌலானா மௌதூதி மறுக்கிறாரா?? பதில் - 2

இஸ்மத் அலி



'தஜ்ஜாலின் வருகையை மறுக்கும் அபுல் அஃலா மௌதூதி – பதில் தருமா ஜமாஅத்தே இஸ்லாமி' என்ற தலைப்பில் SLTJ அமைப்பினர் தமது 'அழைப்பு' ஏப்ரல் மாத இதழில் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த அசத்தியங்களை விளக்கி 'நுனிப்புல் மேயும் ஸலபித்துவ ஆய்வுகள் - மௌலானா மௌதூதி தஜ்ஜாலின் வருகையை மறுக்கிறாரா?' எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை நான் எழுதியிருந்தேன். இக்கட்டுரை சத்தியத்தை நேசிக்கின்ற , அதை தேடுவதில் ஆர்வமுள்ள, அதை ஏற்றுக் கொள்கின்ற நல்ல உள்ளங்களுக்கு தெளிவை ஏற்படுத்தியிருந்தால் - அல்ஹம்துலில்லாஹ் - புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.


என்றாலும் சிறிலங்கா தௌஹீத் ஜமாஅத் ரசிகர் மன்றத்தினைச் சேர்ந்த பலர் 'மறுப்பெழுதி மானத்தை வாங்குகிறார்கள்...ஏதாவது செய்யுங்கள்' என்று அழாத குறையாக விண்ணப்பித்த வேண்டுகோள்களுக்கிணங்க 'நான் சில நாட்களாய் ஊரில் இல்லை..விரைவில் பதில் தருகின்றேன்' என்று அவர்களை ஆற்றுப்படுத்திவிட்டு ஒரு வார காலமாய் சிந்தித்து சிந்தித்து கடைசியில் 'வரிக்கு வரி பதில்' என்ற பெயரில் ஏற்கனவே சுட்டுப் புளித்துப் போன அப்பத்தை திருப்பிப் போட்டு 'புதுசா சுட்டப் பலகாரம்' என்று ஒரு கட்டுரையை எழுதி தமது ரசிகர் மன்றத்தினரை திருப்திப்படுத்த முனைந்திருக்கிறார் சகோ: ரஸ்மின். (அல்லாஹூத்தஆலா அவரின் இல்மையும், சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தையும் விரிவுபடுத்துவானாக)


சகோ: ரஸ்மின் எழுதிய கட்டுரை இவர்கள் நுனிப்புல் மேய்கிறவர்கள் என்பதையும், சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் சுபாவம் இவர்களிடம் துளியும் இல்லை என்பதையும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. ஏனெனில் இவர்கள் நாம் ஆதாரத்தைக் காட்டிய பின்னரும் 'வரிக்கு வரி பதில் தர வேண்டியவர்கள், மலுப்பியிருக்கிறார்கள்' என்று சொல்லி திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள். மௌலானா மௌதூதி தஜ்ஜாலின் வருகையை மறுக்கவில்லை – அவன் தோன்றி விட்டானா? என்ற விடயத்தைதான் அவர் மறுக்கிறார் என்பதை நாம் எமது முதற்கட்டுரையில் தெளிவாக விளக்கியிருந்தோம். சகோதரர்கள் இதனை விளங்கிக் கொள்ளும் பொருட்டு இது பற்றி சமரசம் மார்ச், ஏப்ரல் மாத இதழ்களில் வெளியான கட்டுரையின் பிரதிகளை இங்கு இணைத்துள்ளோம். இக்கட்டுரையின் அடுத்த பந்தியை வாசிக்க முன்னர் இவ்விரு கட்டுரைகளையும் முழுமையாக வாசிக்குமாறு வினயமாக வேண்டுகின்றோம்.










இவ்விரு கட்டுரைகளையும் முழுமையாக வாசித்திருந்தால் இவர்கள் முன்வைத்த கருத்துக்கள் எவ்வளவு அசத்தியமானவை என்பதையும், நுனிப் புல் மேய்ந்தவர்கள் யார்? பனிப் புல் நக்கியவர்கள் யார்? என்பதையும் நீங்கள் சரியாக புரிந்து கொண்டிருப்பீர்கள்.


முதல் கட்டுரையில் மௌலானா மௌதூதி கூறிய 'தஜ்ஜால் பற்றிய செய்திக்கு ஷரீஅத்தில் அந்தஸ்து எதுவுமில்லை. அவனைத் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை. மக்களிடையே இவ்வாரான செய்திகள் பிரபலமானதற்கான பொருப்பு இஸ்லாம் மீது இல்லை. அதில் ஏதாவது ஒன்று தவறு என்று நிரூபனமானாலும் அதனால் இஸ்லாத்திற்கு எந்த நஷ்டமும் வரப்போவதில்லை' என்ற கருத்தானது மௌலானாவின் தர்ஜூமானுல் குர்ஆன் சஞ்சிகையில் சகோதர் ஒருவர் கேட்ட நீண்ட கேள்வித் தொடரில் 'தஜ்ஜால் எங்கேயோ இருக்கிறான் என்பதுதான் பிரபலமான கருத்து. அந்த இடம் எது? இன்று உலகில் மூலை முடுக்கெல்லாம் மனிதன் அலசிப் பார்த்து உள்ளான். இருந்தும் தஜ்ஜால் பற்றிய விவரம் ஏன் கிடைக்கவில்லை? என்ற கேள்விக்கான பதிலாகவே அமைந்தது என்பது கட்டுரையை வாசித்த உங்களுக்கு புரிந்திருக்கும்.


ஆனால் இந்த பதில் மௌலானா தஜ்ஜாலின் வருகையை முழுமையாக மறுக்கிறார் என்ற கருத்தை ஏற்படுத்தியது. இதனை வெளிப்படுத்தி இன்னுமொருவர் அடுத்த தர்ஜூமானுல் குர்ஆன் கேள்வி – பதில் பகுதியில் பின்வருமாறு கேள்வி எழுப்பி இருந்தார்.

'தஜ்ஜால் பற்றிய செய்திகளெல்லாம் கதைகள், அதற்கு ஷரீஅத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை. என பதில் அளித்திருந்தீர்கள். ஆனால் எனக்குத் தெரிந்த வகையில் குறைந்த பட்சம் முப்பது அறிவிப்புக்களில் தஜ்ஜால் பற்றிய குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன...'
என்று வினவியிருந்தார்.

இதற்கு மௌலானா மௌதூதி அளித்த பதிலானது மிகத் தெளிவாக அவர் தஜ்ஜாலின் வருகையை மறுக்கவில்லை என்பதைக் காட்டுகின்றது.

' தஜ்ஜால் எங்கோ இருக்கிறான் என்பதைதான் நான் கதை என்றேன். இதைத் தவிர மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தப் போகும் தஜ்ஜால் வெளிப்பட உள்ள செய்தியையே நானும் சார்ந்துள்ளேன். அத்துடன் எப்போதும் என் தொழுகையில் 'மஸீஹூத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்' என்ற துஆவை ஓதி வருகின்றேன்.

தஜ்ஜால் பற்றிக் கூறப்பட்டுள்ள நபி (ஸல்) அவர்களின் அனைத்து நபிமொழிகளையும் ஒட்டுமொத்தமாக பார்வையிடும் போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பெரும் பொய்யன் தோன்ற இருக்கிறான், அவனின் குணங்கள் இவ்வாறெல்லாம் இருக்கும், அவன் சில தனித் தன்மைகளைப் பெற்றிருப்பான் என்கின்ற இல்ம் கிடைத்திருக்கின்றது என்பது தெளிவு. எனினும் அவன் எப்போது தோன்றுவான், எங்கே தோன்றுவான், நபியின் காலத்திலேயே பிறந்துவிட்டானா? அல்லது நபியின் காலத்திற்குப் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தோன்றுவானா? போன்றவை நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை'


மௌலானாவின் இக் கூற்று வாசிப்பறிவுள்ள சிறு பிள்ளைக் கூட அவர் தஜ்ஜாலின் வருகையை மறுக்கவில்லை, அவன் தோன்றிவிட்டானா என்ற விடயத்திலேயே சந்தேகப்படுகின்றார் என்பதை புரிந்து கொள்ளும். இதற்கு மேலும் ஆதாரம் காட்டும் வகையில் அவரின் தப்ஸீரில் சூறதுல் அஹ்சாப் 40 வசனத்திற்கான நீண்ட விளக்க உரையின் பின்னர் அவர் குறிப்பிட்டிருந்த பின்வரும் பந்தியையும் நாம் முதற் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

' நாம் மேலே குறிப்பிட்ட ஹதீஸ்களை நீங்கள் ஞாபகப்படுத்திப் பார்த்தீர்கள் என்றால் தஜ்ஜால் என்பவன் யஹூதிகளிலிருந்து தோன்றுவான் என்பதையும், அவன் எழுபதினாயிரம் பேருடன் சிரியாவுக்குள் நுழைந்து தமஸ்கஸ் வரை முன்னேறுவான் என்பதையும், அது சமயம் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்குவார்கள் என்பதையும், அவர்களைக் கண்ட தஜ்ஜால் இஸ்ரேல் நோக்கி விரண்டோடுவான் என்பதையும், அல்-லித் எனும் இடத்தில் அவன் கொல்லப்படுவான் என்பதையும் நீங்கள் சந்தேகமின்றி புரிந்து கொள்வீர்கள்'
(தப்ஹீமுல் குர்ஆன் - சூறதுல் அஹ்சாப் - அரபுப் பதிப்பு – பக்கம் : 78)




ஆனால் விதண்டாவாதிகள் இதற்கு பின்னரும் 'இல்லை..இல்லை...அவர் தஜ்ஜாலின் வருகையை முற்றாக மறுக்கிறார்..அது பற்றிய எல்லா ஹதீஸ்களையும் மறுக்கிறார்' என்று மல்லுக்கட்ட வந்தால் நாமென்ன செய்வது?? 'சரி நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று காலென்றே வைத்துக் கொள்ளுங்கள் - மஅஸ்ஸலாம்' என்று சொல்லிச் செல்வதுதான் குர்ஆன் சொல்லும் வழிமுறை.



தஜ்ஜால் தோன்றிவிட்டானா??


இது அல்லாஹூக்கு மட்டுமே தெரிந்த விடயம். தஜ்ஜாலின் குழப்பம், அவனின் பண்புகள், அவன் தோன்றவிருக்கும் இடம் என்பவை நபியவர்களுக்கு வஹியின் அறிவைக் கொண்டு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவன் தோன்றிவிட்டானா என்பது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தெளிவாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. தனக்கு ஏலவே வஹி மூலம் தஜ்ஜால் பற்றி அறிவிக்கப்பட்ட அடையாளங்கள் வெளிப்பட்ட சில நபர்களை நபியவர்கள் தஜ்ஜாலாக இருப்பானோ என்று சந்தேகித்தார்கள். அந்த வகையிலேயே இப்னு ஸியாத் (இப்னு ஸாஇத், இப்னு ஸய்யாத் என்றும் சில ஹதீஸ்களில் வந்துள்ளன) எனும் சிறுவன் விடயத்திலும் நபியவர்கள் தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்கள். எனவேதான் ஸஹாபாக்களுக்கு நபியவர்களின் மரணத்தின் பின்பும் இப்னு சியாத் மீது சந்தேகம் இருந்தது. இமாம் முஸ்லிம் இது தொடர்பான ஹதீஸ்களை கிதாபுல் பிதன் அத்தியாயத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த ஹதீஸ்கள் இப்னு ஸியாதை நபியவர்கள் தஜ்ஜால் என்று நினைத்ததையும், பிறகு அவர்களின் எண்ணம் சரியானதாக இருக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகின்றன.


அந்த ஹதீஸ்களில் சிலவற்றை இங்கு விளக்கத்திற்காக குறிப்பிடுகின்றோம். (எல்லா ஹதீஸ்களையும் குறிப்பிடுவதை விரிவஞ்சி தவிர்ந்து கொள்கிறோம்)

1) அப்துல்லாஹ் ரழியல்லாஹூ அன்ஹூ அறிவிக்கின்றார்கள் : நாம் நபியவர்களுடன் சில சிறுவர்களை கடந்து சென்றோம். எம்மைக் கண்ட சிறுவர்கள் கலைந்து செல்ல இப்னு ஸியாத் மாத்திரம் தானிருந்த இடத்திலேயே அமர்ந்திருந்தான். அவனது செயல் நபியவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. அவனிடம் சென்ற நபியவர்கள் 'நான் அல்லாஹ்வின் தூதர் என்று நீ சான்றுபகர்கின்றாயா?' என்று வினவ, அதற்கவன் 'இல்லை. மாறாக நான் அல்லாஹ்வின் தூதர் என்று நீர் சான்றுபகரும்' என்று பதிலளித்தான். அப்போது உமர் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் 'இறை தூதரே விட்டுவிடுங்கள், அவனை நான் கொன்றுவிடுகின்றேன்' என்றார்கள். அதற்கு நபியவர்கள் 'நீர் நினைக்கின்ற ஆளாக அவனிருந்தால் உம்மால் அவனைக் கொல்ல முடியாது' (ஹதீஸ் இலக்கம் : 7528)


2) ஸஈத் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள் : இப்னு ஸியாதை நபியவர்கள் மதீனாவின் வீதியொன்றில் சந்தித்தார்கள். அவர்களோடு உமர், அபூபக்ர் ரழியல்லாஹூ அன்ஹூம் ஆகியோரும் இருந்தனர். அப்போது நபிகளார் அவனிடம் 'நான் இறைதூதர் என்று நீ சான்றுபகர்கின்றாயா? என்று வினவ, 'நான் அல்லாஹ்வின் தூதர் என்று நீர் சான்றுபகர்கின்றீரா?' என்று பதிலளித்தான். அதற்கு நபியவர்கள் 'நான் அல்லாஹ்வையும், அவன் மலக்குகளையும், அவனது வேதங்களையும் ஈமான் கொண்டிருக்கிறேன். சரி இப்போது நீ எதனைக் காண்கிறாய்' என்று வினவினார்கள். அதற்கு அவன் 'நீரில் மேலிருக்கும் ஒர் அரியாசணத்தைக் காண்கிறேன்' என்றான். 'கடல் நீரின் மீதிருக்கும் இப்லீஸின் அரியாசணத்தைதான் நீ காண்கிறாய்..வேறு எதனைக் காண்கிறாய்' என்று நபிகளார் கூறியதற்கு 'இரண்டு உண்மையாளர்களையும், ஒரு பொய்யனையும் அல்லது ஓர் உண்மையாளனையும் இரண்டு பொய்யர்களையும் காண்கிறேன்' என்று அவன் பதிலளித்தான். 'அவனுக்கு குழப்பமேற்பட்டுவிட்டது..அவனை விட்டுவிடுங்கள்' என்று நபிகளார் கூறிச் சென்றார்கள்.(ஹதீஸ் இலக்கம் : 7530)


3) முஹம்மத் பின் முன்திர் அறிவிக்கின்றார்: ஜாபிர் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் 'இப்னு ஸாஇத்தான் தஜ்ஜால்' என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுபவராக இருந்தார். அவரிடம் நான் 'அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு நீர் சொல்கிறீரா? என்று வினவ, 'ஆம். நபியவர்களின் முன்னிலையில் உமர் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அவ்வாறு சத்தியம் செய்து கூறுபவராக இருந்தார் – அதனை நபியவர்கள் மறுக்கவில்லை' என்று பதிலளித்தார். (ஹதீஸ் இலக்கம் : 7537)


மேற் கூறிய ஹதீஸ்களிலிருந்து நபியவர்கள் ஏற்கனவே தனக்கு அறிவிக்கப்பட்ட வஹியின் அடிப்படையில் , தஜ்ஜாலின் பண்புகள் வெளிப்பட்ட இப்னு ஸியாதை தஜ்ஜாலாக இருக்கலாம் என்று அனுமானித்தார்கள் என்பதையும், அந்த சந்தேகம் ஸஹாபாக்களிடம் இருந்தது என்பதையும், அது பற்றி தனக்கு வஹீ மூலம் அறிவிக்கப்படாமையால் அவர்களின் சந்தேகம் பிழையானது என்பதை உணர்த்தாமலும் நபியவர்கள் இருந்தார்கள் என்பதையும், இச்சந்தேகம் நபிகளாரின் மரணத்தின் பின்பும் தொடர்ந்தது என்பதையும் தெளிவுபடுத்துகின்றன.


ஆனால், நபிகளார் அனுமானித்தது போன்றோ, அதன் அடிப்படையில் சஹாபாக்கள் சந்தேகம் கொண்டது போலவோ இப்னு ஸியாதின் விடயம் அமையவில்லை. இதனை இமாம் முஸ்லிம் அறிவிக்கும் அதே ஹதீஸ்களின் தொடரில் பதிவு செய்துள்ள பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது.


ஸஈத் அல் குத்ரீ ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் இப்னு ஸாஇத்துடன் மக்கா நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது அவன் 'நான் சிலரைச் சந்தித்தேன். அவர்கள் நான்தான் தஜ்ஜால் என்று நினைக்கிறார்கள். 'தஜ்ஜால_க்க குழந்தைகள் இருக்காது' என்று நபிகளார் சொன்னதை நீர் கேள்விப்பட்டதில்லையா?' என்று வினவினான். அதற்கு நான் 'ஆம் கேள்விப்பட்டிருக்கிறேன்' என்றேன். பிறகு 'தஜ்ஜால் மக்கா, மதீனா நகரங்களுக்கு நுழைய முடியாது என்று நபியவர்கள் சொன்னதை நீர் கேள்விப்பட்டதில்லையா?' என்று வினவினான். அதற்கு நான் 'ஆம் ..கேட்டிருக்கிறேன்' என்று சொன்னேன். அதற்கு அவன் ' நான் மதீனாவில் பிறந்தவன். இதோ நான் மக்கா நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன்' என்றான். பிறகு கடைசியாக என்னிடம் அவன் இப்படிக் கூறினான். 'அறிந்து கொள்! அவனது பிறப்பைப் பற்றியும், அவனது இடத்தைப் பற்றியும், அவனது பெற்றோர் பற்றியும், அவன் எங்குள்ளான் என்பதையும் நான் அறிவேன்' என்றான். பின்னர் அது பற்றி தனக்கு குழப்பமேற்பட்டுவிட்டது என்றும் கூறினான்.

இந்த இப்னு ஸியாத் சூனியக்காரனாக இருந்தான் அல்லது குறிசொல்பவனாக இருந்தான், பிறகு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான். உமையாக்களின் ஆட்சியில் நடைபெற்ற ஒரு போரில் கலந்து கொண்டு உயிரிழந்தான் என்பது வரலாற்றாசிரியர்களின் கருத்து.

இந்த விளக்கத்தின் அடிப்படையிலேயே மௌலானா மௌதூதி இப்னு ஸியாத் விடயத்தில் நபிகளார் தெரிவித்த கருத்து அனுமானம் என்றும் அந்த அனுமானம் சரியானதாக அமையவில்லை என்றும் குறிப்பிடுகின்றார். இதே அடிப்படையில்தான் தமீம் அத்தாரீ ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் தமது கடற்பிரயாணத்தில் கண்ட உருவம் பற்றிய விடயத்திலும் அது தஜ்ஜாலாக இருக்க முடியுமோ என்று நபிகளார் சந்தேகித்தார்கள். அதுதான் தஜ்ஜால் என்று அவர்கள் உறுதியாகக் குறிப்பிடவில்லை. இதனை குறித்த ஹதீஸின் போக்கிலிருந்தும், நபிகளார் இந்த செய்தியை அறிவித்த பின்னரும் இப்னு ஸியாத் மீது சஹாபாக்களுக்கிருந்த சந்தேகமும் உறுதிப்படுத்துகின்றன.
தமீம் அத்தாரீ ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் குறிப்பிட்ட நிகழ்வு 'தாம் ஏற்கனவே கூறிய தஜ்ஜால் பற்றிய விடயத்தோடு உடன்படுவதால், அதனால் கவரப்பட்டே தாம் இச்செய்தியை அறிவிப்பதாக நபிகளார் குறிப்பிட்டது அந்த ஹதீஸில் நேரடியாகவே வந்திருக்கிறது.

« فَإِنَّهُ أَعْجَبَنِى حَدِيثُ تَمِيمٍ أَنَّهُ وَافَقَ الَّذِى كُنْتُ أُحَدِّثُكُمْ عَنْهُ وَعَنِ الْمَدِينَةِ وَمَكَّةَ أَلاَ إِنَّهُ فِى بَحْرِ الشَّامِ أَوْ بَحْرِ الْيَمَنِ لاَ بَلْ مِنْ قِبَلِ الْمَشْرِقِ ما هُوَ مِنْ قِبَلِ الْمَشْرِقِ مَا هُوَ مِنْ قِبَلِ الْمَشْرِقِ مَا هُوَ »

இதுதான் இமாம் முஸ்லிம் தமீம் அத்தாரீ ரழியல்லாஹூ அன்ஹூ விடயத்தில் அறிவிக்கும் ஹதீஸின் இறுதிப் பகுதி. (ஹதீஸ் இலக்கம் : 7573) இதன் கருத்தாவது :
'நான் உங்களுக்கு தஜ்ஜால், மதீனா, மக்கா பற்றி அறிவித்த விடயங்களோடு உடன்படும் வகையில் தமீம் சொன்ன செய்தி என்னைக் கவர்ந்தது. அறிந்து கொள்ளுங்கள் !! அவன் சிரியக் கடலில் இல்லை யமன் கடலில் இருக்கின்றான். இல்லை..அவன் கிழக்குப் புறத்திலிருந்து வருவான்..கிழக்குப் புறமிருந்து வருவான்...கிழக்குப் புறமிருந்து வருவான்'

தமீம் அத்தாரீ சொன்ன உருவம்தான் தஜ்ஜால் என்பதை நபிகளார் தெளிவாக வஹியின் அடிப்படையில் அறிந்திருந்தால் - அதை அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பார்கள். இங்கு மூன்று இடங்களைக் குறிப்பிட்டு – அதிலும் கிழக்குப் பகுதியை அழுத்தம் கொடுத்து நபிகளார் தஜ்ஜால் தோன்றப் போகும் இடத்தை நபிகளார் அறிவித்தது தமீம் அத்தாரீ கண்ட உருவம்தான் தஜ்ஜால் என்பதை நபிகளார் உறுதியாகக் குறிப்பிடவில்லை என்பதைக் காட்டுகின்றது.


இத்தகைய விளக்கத்தின் அடிப்படையிலேயே மௌலானா மௌதூதி தஜ்ஜாலின் தோன்றிவிட்டான் என்ற செய்திக்கு ஷரீஅத்தில் எந்த அந்தஸ்த்தும் இல்லை என்றும் அவை நபிகளாரின் அனுமானமே தவிர வஹியல்ல என்றும் கூறினார்கள். இதனால் நபிகளாரின் நுபுத்துவத்தின் மீதோ, அவர்களின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையின் மீதோ துளியும் களங்கம் ஏற்பட்டுவிடாது என்பதையும் அக்கட்டுரையில் வலியுறுத்தியுள்ளமை நோக்கத்தக்கது.


எனவே தஜ்ஜாலின் வருகையையோ, அவன் ஏற்படுத்தப் போகும் பித்னாவையோ மௌலானா மௌதூதி மறுக்கவில்லை என்பதையும், தஜ்ஜால் தோன்றி விட்டானா என்ற விடயத்திலேயே அவர் சந்தேகப்படுகின்றார் என்பதையும், மௌலானா மௌதூதி மீது கூறப்பட்ட குற்றச் சாட்டுக்கள் காழ்ப்புணர்வினதும், நுனிப் புல் மேயும் ஆய்வாளர்களின் வெற்று விமர்சனங்களுமே என்பதை சுயமாக சிந்திப்பவர்கள் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகின்றோம்.


இறுதியாக...

வரிக்கு வரி பதில் என்ற பெயரில் எதையோ எழுதி தமது முரீதுகளை திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகளை இனியாவது கைவிடுங்கள். இத்தகைய ஒரு பதிலை சம்பந்தப்பட்டவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எனவேதான் 'ஏன் இதற்கு முன்னர் சொன்னவைகளுக்கு மௌனமாக இருந்து விட்டு இதற்கு மட்டும் பதில்' என்று கேட்டிருக்கிறார்கள். இது இயக்க விசுவாசத்தினாலோ மௌலானா மீது கொண்ட பக்தியினாலோ அல்ல. மௌலானாவின் தப்ஸீரை ஆய்வு செய்பவன் என்ற வகையிலும், இஸ்லாத்திற்காக தன்னை அர்ப்பணித்த ஒரு யுக புருஷர் என்ற வகையிலும் சிலரின் தவளை முழக்கங்களால் அவர் பற்றிய நல்லெண்ணம் பாதிக்கப்படக் கூடாதென்பதற்காகவே எழுதப்பட்டது. இத்தகைய நல்லெண்ணம் உங்கள் பார்வையில் பக்தி என்று படலாம். ஆனால் அது அல்-குர்ஆன் சொல்லும் நேசம் என்பதுதான் நாம் விளங்கிக் கொண்டது.

وَمَنْ يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ


யார் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், முஃமீன்களையும் நேசத்துக்குரியவர்களாக ஆக்கிக் கொள்கின்றனரோ, நிச்சயமாக அல்லாஹ்வின் கட்சியனர்தான் வெற்றி பெறுவர்'

(அல்- மாஇதா : 56) –

ஈமான் கொண்டு, அதற்காகாவே வாழ்வை அர்ப்பணித்த ஒரு மனிதர் மீது நாம் கொண்டிருக்கின்ற நேசம் - பக்தியோ, கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுவதோ என்று நீங்கள் விளங்கிக் கொண்டால் அதற்கு நாம் பொறுப்பல்ல.

அடுத்து...உங்கள் ஏனைய கேள்விகளுக்கு எங்களிடம் மறுப்புக்கள் இல்லாமலில்லை. ஆனால் உங்களுக்கு பதில் சொல்லித்தான் நாங்கள் சத்தியத்தில் இருக்கிறோம் என்பதை நிரூபிப்பதற்கு எங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை. எங்களை விசாரிப்பதற்கும், தீர்ப்பு சொல்வதற்கும் அல்லாஹ் போதுமானவன். மேடைப் போட்டு விவாதிக்க அழைத்தும் தயக்கம் காட்டுவதேன்? அசத்தியத்தில் இருப்பதனால்தானே? என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள். மேடை போட்டு விவாதிப்பதை தஃவா அணுகுமுறையாகவோ, நபிகளாரின் சுன்னாவாகவோ நாம் கருதவில்லை. நீங்கள் மேடை போட்டு நடத்திய விவாதங்களின் பயன்கள் என்ன என்பதை முழுச் சமூகமும் நன்கறியும். காபிர்களோடு ஆயுதம் தூக்கிப் போராட அனுமதித்த அல்லாஹூத்தஆலா அவர்களை நாவினால் நோகடிப்பதை நபிகளாருக்கோ, ஸஹாபாக்களுக்கோ அனுமதிக்கவில்லை. 'அழகிய முறையில் வாதிடுங்கள்' என்பதுதான் அல்லாஹூத்தஆலா அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்த உபதேசம். உங்கள் வாதட்ட முறைமை எப்படி என்பது எல்லோருக்கும் தெரியும்.


அடுத்து...உங்கள் அணியில் அரைகுறையாகப் படித்த பல பேர் இருக்கிறார்கள் என்பது தெரிந்த விடயம். ஆனால் கட்டுரையாளர் தன்னை M.I.Sc என்று அடையாளப்படுத்திக் கொள்பவராக இருந்தும் ஆய்வு முறைமை, ஆய்வு ஒழுக்கம் பற்றி தெரியாமல் இருப்பது கவலையளிக்கின்றது. காரணம் மௌலானாவின் பந்தியொன்றை விளக்க நான் அடைப்புக் குறியிட்டு சில வசனங்களை சேர்ததை - இது விளக்கமளிக்கும் ஒரு முறை என்பதை தெரியாமல் 'மௌதூதியைக் காப்பாற்றும்' முயற்சி என்று சொல்லியிருப்பதுதான்.


இந்த பதிலைப் பார்த்த பின்பும் 'வரிக்கு வரி' பதில் கேட்டோம் - மலுப்புகிறார்கள்' என்று சொன்னால் உங்கள் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் வேண்டுமென்றால் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் சுயமாக சிந்திப்பவர்கள் உண்மையைப் புரிந்து கொள்ளாத அளவுக்கு முட்டாள்கள் அல்ல என்பதையும், ஆயிரம் தடவை 'விஷம்...விஷம்' என்று மந்திரித்தாலும் தூய பால் பால்தான் என்பதையும் அது விஷமாகி விடாது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

இந்த பதில் உங்களை நோகடித்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். மனந் திறந்த கலந்துரையாடலுக்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். அல்லாஹ் உங்களினதும் எங்களினதும் அமல்களை ஏற்று அங்கீகரிப்பானாக.

19 கருத்துகள்:

  1. //என்றாலும் சிறிலங்கா தௌஹீத் ஜமாஅத் ரசிகர் மன்றத்தினைச் சேர்ந்த பலர்//

    ச‌கோத‌ர‌ர் இவ்வாரான வார்த்தை பிர‌யோக‌த்தை த‌விர்த்து கொள்ளவும், சிறிலங்கா தௌஹீத் ஜமாஅத் ஒன்றும் சினிமா கொட்ட‌கை அல்ல என்ப‌தை க‌வ‌ணத்தில் கொள்ளவும். இங்கு பேச‌ப்ப‌டுவ‌து அல்லாஹுவின் மார்க்க‌ம் ப‌ற்றி. முடிந்த‌லவு நளின‌மான வார்த்தைக‌லை பிர‌யோகிக்க‌வும். இத‌யே மாற்றி இவ்வாறு சொன்னால் உங்க‌ளால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

    சிறிலங்கா ஜமாஅதே இஸ்லாம் ரசிகர் மன்றத்தினைச் சேர்ந்தவ‌ர்க‌ள்..........

    அல்லாஹு உங்க‌ளுடைய‌ இழ்மை இன்னும் விரிவாக்குவானாக‌.........

    பதிலளிநீக்கு
  2. அந்த சொல்லைப் பயன்படுத்தியதற்காக மன்னிக்கவும். உங்கள் கருத்துக்கு ஜஸாகுமுல்லாஹூ கைரன்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா29 மே, 2011 அன்று AM 6:25

    சகோதரர்,NTR Thawheed
    உங்கள் கருத்து சரிதான் ஆன்னால் "பக்கவாத்தியம்" என்று எழுதி
    உள்ளங்களில் முதலில் காயத்தை ஏற்படுத்தியவர்களிடம் இதே கேள்வியை கேட்பீர்கள் என நினைக்கிறேன்

    அடுத்த இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றும் வில்லுப்பாட்டு நடாத்தவில்லை என்பதை அவர்களும் உணர வேண்டும்...

    உங்களை போன்ற உண்மையான உள்ளங்கள் இருந்தால் இப்படியான ஒரு பதிலின் தேவையே வந்திருக்காது என்பது என் தாழ்மையான கருத்து.

    பதிலளிநீக்கு
  4. சகோதரர்,NTR THAWHEED
    உங்கள் கருத்து சரிதான் ஆன்னால் "பக்கவாத்தியம்" என்று எழுதி
    உள்ளங்களில் முதலில் காயத்தை ஏற்படுத்தியவர்களிடம் இதே கேள்வியை கேட்பீர்கள் என நினைக்கிறேன்

    அடுத்த இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றும் வில்லுப்பாட்டு நடாத்தவில்லை என்பதை அவர்களும் உணர வேண்டும்...

    உங்களை போன்ற உண்மையான உள்ளங்கள் இருந்தால் இப்படியான ஒரு பதிலின் தேவையே வந்திருக்காது என்பது என் தாழ்மையான கருத்து.

    பதிலளிநீக்கு
  5. கட்டுரையாளரின் கவனத்திற்கு! (1)

    (இமேஜாகவுள்ள)கட்டுரையில் சகோ. மௌதூதி அவர்கள் அளித்த விளக்கத்தை, தாங்கள் சரியாகப் புரியவில்லை என்பதை, தங்களது வியாக்கியானம் சொல்லி நிற்கிறது.

    நம்பிக்கை சார்ந்த விசயங்களில் சகோ. மௌதூதி சந்தேகப் படுவது என்பது, தனது ஈமானில் குறையுள்ளதை அவரின் மனதிலுள்ள எழுத்துக்களே அதர்க்கு சாட்சியாவுள்ளது. தெள்ளத் தெளிவாக ஆதாரப் பூர்வமான பல நபிமொழிகள் இருந்தும் அவைகள் தனது சிந்தனைக்கு, தனது சொந்தக் கருத்துக்கு ஒத்துவரவில்லையே என்பதர்க்காக
    நபியவர்களை, ஊகமாக, சந்தேகத்தோடு, முரணாகக் கூறியுள்ளார் என்று அவர்கள் மீது அவதூறு கூறுவது தங்களுக்கு ஏன் அது தவறு என்று படாமல், சரியென்று நிறுவுவதற்காக வளைந்து எழுதியிருப்பது, தங்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒரு பக்கம்,

    //ஈமான் கொண்டு, அதற்காகாவே வாழ்வை அர்ப்பணித்த ஒரு மனிதர் மீது நாம் கொண்டிருக்கின்ற நேசம் - பக்தியோ, கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுவதோ அல்ல என்று நீங்கள் விளங்கிக் கொண்டால் அதற்கு நாம் பொறுப்பல்ல//

    என்று கூறிக் கொண்டு, மறு பக்கம் அதையையே உண்மைப் படுத்துவது தங்களுக்கு வேடிக்கையாகத் தெரியவில்லையா?

    அதிலும் குறிப்பாக இருதியாகக் தாங்கள் எழுதியுள்ள வார்த்தை, அறிஞர்கள் எது சொன்னாலும் அதை அப்படியே பின்பற்றுவதுதான் வழமையென்பதை, தெள்ளத் தெளிவாக தாங்களே ஒத்துக் கொண்டுள்ளதை மீண்டும் ஒரு முறை வாசித்துத்தான் பாருங்களேன். இதோ நீங்கள் உங்கள் மனதில் உள்ளதை வார்த்தையாக வடித்துள்ளீர்கள்.

    //ஈமான் கொண்டு, அதற்காகாவே வாழ்வை அர்ப்பணித்த ஒரு மனிதர் மீது நாம் கொண்டிருக்கின்ற நேசம் - பக்தியோ, கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுவதோ அல்ல என்று நீங்கள் விளங்கிக் கொண்டால் அதற்கு நாம் பொறுப்பல்ல//

    அறிஞர்கள் எது சொன்னாலும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்பதுதான் எங்களது வழமை என்ற தங்களது வழமையை, கட்டுரைக்காக ஒரு நிமிடம் மாற்றப் புகுந்து உண்மையையே உரைத்துள்ளீர்கள்.
    ”பக்தியோ, கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுவதோ அல்ல என்று நீங்கள் விளங்கிக் கொண்டால் அதற்கு நாம் பொறுப்பல்ல”

    கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுவதோ அல்ல என்று நீங்கள் விளங்கிக் கொண்டால்.... என்பதிலிருந்து கண்ணை மூடிக் கொண்டு பின் பற்றுபவர்கள்தான் என்பதை சந்தேகமற வாய்மொழிந்துள்ளீர்கள். இது ஒன்றும் நீங்கள் இப்படிக் கூறித்தான் ஏனையவர்கள் அறிய வேண்டுமென்பதல்லவே! ஜமாஅத் இஸ்லாமியென்றால் கண்ணை மூடிக் கொண்டு பின் பற்றுபவர்கள்தான் என்பது உலகம் உள்ளலவும் அறியும்.

    நன்றி
    அன்ஸார்

    பதிலளிநீக்கு
  6. (2)
    தயவு செய்து கட்டுரையாசிரியர் மௌதூதியின் கட்டுரையயை மீண்டுமு ஒரு முறை வாசிக்கவும். ஏனெனில் அதிலுள்ள முன்னுக்குப் பின்னுள்ள முரண்பாட்டை விளங்கிக் கொள்வீர்கள்.

    அதாவது
    //தஜ்ஜால் பற்றிக் கூறப்பட்டுள்ள நபி (ஸல்) அவர்களின் அனைத்து நபிமொழிகளையும் ஒட்டுமொத்தமாக பார்வையிடும் போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பெரும் பொய்யன் தோன்ற இருக்கிறான், அவனின் குணங்கள் இவ்வாறெல்லாம் இருக்கும், அவன் சில தனித் தன்மைகளைப் பெற்றிருப்பான் என்கின்ற இல்ம் கிடைத்திருக்கின்றது என்பது தெளிவு. எனினும் அவன் எப்போது தோன்றுவான், எங்கே தோன்றுவான், நபியின் காலத்திலேயே பிறந்துவிட்டானா? அல்லது நபியின் காலத்திற்குப் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தோன்றுவானா? போன்றவை நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை'//

    //........அவன் சில தனித் தன்மைகளைப் பெற்றிருப்பான் என்கின்ற இல்ம் கிடைத்திருக்கின்றது என்பது தெளிவு.// இப்படிக் கூறும் மௌதூதி, மூன்றாவது (இமேஜாகவுள்ள) பந்தியில் தனக்கே முரண்பட்டுக் கூறுவதை கவனியுங்கள்.

    //நபியவர்கள் வஹியின் இல்ம் காரணமாக இவற்றைக் கூறவில்லை. மாறாக சந்தேகத்தின் பெயரிலேயே கூறினார்கள் என்பது முதல் கருத்தில் தானாகவே தெரிகிறது. அவர்களின் கூற்று உண்மையானது என உறுதிப் படவில்லையானாலும்..//

    என்று முன்னுக்குப் பின் உளரி, மொத்தத்தில் நபியவர்கள் இம்மார்க்கத்தில் மனோ இச்சைப் படிதான் கூறியுள்ளார் என்று கூற வருகிறார்.
    இம்முரண்பாட்டை விளங்க, ஏனோ அவர் மீதுள்ள அதீத பாசம் தடுத்து தங்களைத் தடுத்து விட்டது??

    சகோதரர்களே!
    ஒருவர் மீதுள்ள அதீத பாசம் , தூய்மையான மார்க்கத்தை பின் பற்றுவதை விட்டும் நம்மைத் தடுக்க வேண்டாம். ஒருவர் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருப்பினும் அவர் தவறிலிருந்து விதிவிலக்குப் பெற்று விட முடியாது.

    “முஹம்மதாகிய இத்தூதர், தன் மனோ இச்சைப் படி எதையும் பேசுவதில்லை. அவர் பேசுவது, வஹியாக அல்லாஹ்விடமிருந்து அறிவிக்கப் படும் செய்தியைத் தவிர வேறில்லை. (நஜ்ம்: 3-4)

    என்று இவ்வேதத்தில் அல்லாஹ் கூறியிருக்க, முஹம்மத் (ஸல்)அவர்கள் சந்தேகத்தில்தான் கூறினார் என்றும், அவர்களின் கூற்று உண்மையானது என உறுதிப் படவில்லை என்றும், இவ்வாறான செய்திகளை நம்பித்தான் ஆக வேண்டும் என்பது கிடையாது,........ என்றெல்லாம் அதிகபிரசங்கித் தனம் செய்வது அல்லாஹ்வின் தூதரையே கேவலப் படுத்துவது போல் தெரியவில்லையா?

    இவ்வாறான செய்திகளை நம்பித்தான் ஆக வேண்டும் என்பது கிடையாது என்ற மௌதூதியின் விளக்கம்?, நபியவர்களே அதனை நம்பி தொழுகையில் அத்தஹிய்யாத்தில் அவனை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரியதை, ஏலனம் செய்வது போன்றதாக உங்களுக்கு தெரியாமல் போனது ஏன்? நபியவர்கள் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் அப்படிப் பாதுகாப்புத் தேடினார்கள்.??

    நம்பிக்கை சார்ந்த விசயத்தில் “சந்தேகமானது“ என்று மௌதூதி எப்படிக் கூறுவார்??? அவறுக்கு என்ன வஹியா வந்தது? அல்லது மௌதூதி நபியை விட உயர்ந்தவரா? (நஊது பில்லாஹி மின்ஹு)

    அல்லாஹ் கூறுகிறான்-
    أَفَمَن زُيِّنَ لَهُ سُوءُ عَمَلِهِ فَرَآهُ حَسَنًا فَإِنَّ اللَّـهَ يُضِلُّ مَن يَشَاءُ وَيَهْدِي مَن يَشَاءُ فَلَا تَذْهَبْ نَفْسُكَ عَلَيْهِمْ حَسَرَاتٍ إِنَّ اللَّـهَ عَلِيمٌ بِمَا يَصْنَعُونَ ﴿فاطر: ٨﴾

    யாருக்கு தனது தீய செயல் அழகாகக் காட்டப் பட்டு, அதை அழகானதாகக் கருதினானோ அவனா (செர்க்கவாசி)? தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான்.(முஹம்மதே!)நீர் அவர்களுக்காகக்“ கவலைப் பட்டு உமது உயிர் போய் விட வேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

    أَفَمَن كَانَ عَلَىٰ بَيِّنَةٍ مِّن رَّبِّهِ كَمَن زُيِّنَ لَهُ سُوءُ عَمَلِهِ وَاتَّبَعُوا أَهْوَاءَهُم ﴿محمد: ١٤﴾
    தமது இறைவனிடமிருந்து கிடைத்த தெளிவான மார்க்கத்தில் இருப்பவர், தனது மனோ இச்சைகளைப் பின் பற்றி தனது தீய செயல் அழகானதாகக் காட்டப்பட்டவனைப் போன்றவரா?(47-14)

    இது குறித்து இங்கு நான் அதிகம் எழுதுவதை விட இது பற்றிய முழு விளக்கங்களையும் இந்த கருத்துக்களை வாசிக்கும் வாசகர்கள் கீழுள்ள லிங்குகளைகக் க்ளிக் செய்து வாசியுங்கள்.

    http://sltjweb.com/2011/05/26/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF/

    http://kadayanalluraqsha.com/?p=916

    http://www.mujahidsrilanki.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

    நன்றி
    அன்ஸார்

    பதிலளிநீக்கு
  7. சகோதரர் அன்சார் : உங்கள் அறிவையும் - மனதையும் அல்லாஹ் விரிவு படுத்துவானாக!!! SLTJ சகோதரர்களின் கட்டுரையை மட்டுமன்றி மௌலானாவின் கட்டுரைகள் இரண்டையும் - திறந்த மனதோடு வாசியுங்கள்...அவர் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைக் கூற வரவில்லை என்பதை புரிந்து கொள்வீர்கள். மேலும் அவர் தஜ்ஜால் விடயமாக கூறிய விடயங்களை அறிந்து கொள்ள அவர் எழுதிய 'கத்முன் நுபுவ்வா - தமிழில் இறுதி நபித்துவம் என்ற மொழிபெயர்க்கப்பட்டுள்ள' நூலையும் வாசியுங்கள். மௌலானா முன்னுக்குப் பின் முரணான எந்தக் கருத்தையும் கூறவில்லை என்பதை புரிந்து கொள்வீர்கள். சத்தியத்தை மறைத்தலே மிகப் பெரிய அநியாயம். நீங்களும் அநியாயக்காரர்களில் ஒருவராக மாறுவதிலிருந்து அல்லாஹ் உங்களை பாதுகாக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  8. Dear Br.Ismath Ali

    ஒரு கொள்கை இந்த பூமியில் வாழவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள்
    கண்ணியமானவர்கலாகவே இருப்பார்கள்...

    விமர்சனங்கள் இருப்பதை இருப்பதாக சொல்பவை! ஒரு வெண்தாளில் காணப்படும் கறுப்புப் புள்ளியின் அவதானத்தில் அந்த வெண் தாளின் நிறம் பலருக்கு மறந்து போகிறது... கறுப்புப் புள்ளியில் அவதானம் செலுத்தி அந்த தாளையே கறுப்பென்று ஆக்கிவிடும் நிலை இன்று சர்வசாதாரணம்... அந்தத் தாளை இதற்கு முன் பார்த்திராத பொது மக்கள்....
    பலர் அறிமுகம் செய்யும் அந்தக்கருப்புப் புள்ளி தான் அந்தத் தாளின் வடிவம் என்று இதயத்தால் உணருகிறார்கள்..

    உங்களது ஆக்கம், அந்தக்கருப்புப் புள்ளி என சொல்லப்பட்டது கூட பொய் என்று நிரூபிக்கும் போது..கண்கலங்குகிறது..

    இஸ்லாத்திற்காக வாழ்ந்த மனிதர்கள்.. இரவிரவாய் விழித்திருந்து அல்லாஹ்விட்காய் எழுதியவர்கள்.... அவர்கள் மரணித்துவிட்டார்கள்... இப்போது அவர்களின் மாமிசம் கொத்தப்படுகிறது!

    இந்த அநியாய நிமிடங்களில், அல்ல்ஹ்வுக்காக எழுந்துநிற்கும் உங்களைக்கண்டு...
    உங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் நிறுவனமும் மகிழ்ச்சி கொள்கிறது...

    தூற்றுதலும் அசிங்கப்படுத்தலுமே அறிவு என்று அறிமுகப்படுத்தப்படும் நிலையில்,
    பாதுகாப்பதே அறிவு என்று புரியவைத்துள்ளீர்கள்...

    அல்லாஹ் உங்கள் அறிவில் விருத்தியை தரட்டும்...

    பதிலளிநீக்கு
  9. இன்கேனும் அவர்கள் இஸ்லாம் படிக்கட்டும்...!!
    எத்தனையோ முறை உங்களது இந்தப் பதிலை அவர்களது அபாண்டம் சுமத்திய வெப் தளத்தில் நான் கமெண்ட் செய்தேன்..
    ஆனால் உடனடியாக அழித்துவிட்டு கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் பதில்தர முடியுமா என போலியாக மீண்டும் கேட்டார்கள்!
    ஆனால் நீங்களோ அவர்களது குதர்க்கத்தைக் கூட அப்படியே வெளியிட்டிருக்கிறீர்கள்... நிச்சயமாக அவர்களின் உள்ளம் உறுத்தவே செய்யும்!!

    அல்ஹம்டுளில்லாஹ் இது தான் இஸ்லாமிய இயக்கத்திற்கும்.. காழ்ப்புணர்வுக்கும் உள்ள வித்தியாசம்.
    இன்கேனும் அவர்கள் இஸ்லாம் படிக்கட்டும்...!!

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா29 மே, 2011 அன்று PM 2:19

    அன்சார்!

    உங்களுக்கு தமிழ் விளங்குதுதானே! கண்ணை திறந்து முழுசா கட்டுரைய ஒரு தடவை வாசிங்க!
    வாசிச்சிருந்தா நிச்சயமாக சித்த சுவாதீனமுள்ள ஒருவர் ஒரு நாளும், "இதில் உள்ளவர் தஜ்ஜாலின் வருகையை மறுக்கிறார்" என்று சொல்ல மாட்டார்..!
    உங்களுக்கு றஸ்மின் இலும், mujahid இலும் உள்ள பக்தியில் எதையாவது சொல்லி, (குட்டு வெளிப்பட்டுவிட்டதால்) உள்ளத்திலுள்ள எரிச்சலை தீர்த்துக்கொள்ள பார்க்காதீர்கள்! உண்மையிலேயே அல்லாஹ்வையும் ரசூலையும் நம்புகிறவர்களாக இருந்தால் தௌபா செய்து அவதூறிலிருந்து விலகிக்கொள்ளுங்கள்..

    பதிலளிநீக்கு
  11. (1)
    அன்புச் சகோ. இஸ்மத் அலி! அல்லாஹ் தங்களுக்கு ஆழ்ந்த விளக்கத்தை வழங்குவானாக..

    முதலில் நான் என்ன எழுதியுள்ளேன் என்பதை தாங்கள் முழுமையாக வெளியிடாதது ஏன்? எனது இரண்டாவது தொடர் இல (2)டை வெளியிட்ட நீங்கள், எனது இல(1)றை கமான்டை ஏன் வெளியிடவில்லை??
    எதர்க்கு பதில் தர முடியாதோ அவைகளை நீக்கி விட்டு, தங்களுக்கு விருப்பமானதை மட்டும் வெளியிட்டுள்ளீர்களே! அதர்க்கான காரணத்தைக் கூற முடியுமா? இல்லையேல் இரண்டையும் வெளியிடாமல் இருந்திருக்கலாமே!

    //ஆனால் நீங்களோ அவர்களது குதர்க்கத்தைக் கூட அப்படியே வெளியிட்டிருக்கிறீர்கள்..//

    என்ற அனானியின் தங்கள் மீதுள்ள நல்லெண்னம் போலித் தனமானதாகத் தெரிகிறதே!.
    குதர்க்கம் இல்லாமல் நான் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் தர முடியாமல்தான் எடிட் செய்து வெளியிட்டுள்ளீர்கள். நீங்கள் இப்படி செய்பவர் என்று தெரிந்திருந்தால் உங்கள் வலைப் பூவுக்கு வந்ததே தவறு என எண்ணுகிறேன்.
    இந்த கமான்டும் வெளியாகுமா?? என்பது சந்தேகம்தான். இருப்பினும் வாசிக்கும் நீங்களாவது)

    நன்றி
    அன்ஸார்

    பதிலளிநீக்கு
  12. (2)
    இந்த கமான்டும் வெளியாகுமா?? என்பது சந்தேகம்தான். இருப்பினும் வாசிக்கும் நீங்களாவது தெரிய வேண்டுமே என்பதர்க்காக வரைகிறேன்.

    அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! யாரோ எவரோ செய்கிறார் என்பதர்க்காக நீங்களும் அது போன்றுறிப்பது, பழி தீர்ப்பதுதான் நோக்கம் என்பது போலாகிறது.

    இமேஜிலுள்ள மௌதூதியின் கட்டுரையில்,

    //என்கின்ற இல்ம் கிடைத்திருக்கின்றது என்பது தெளிவு,//

    //நபியவர்கள் வஹியின் இல்ம் காரணமாக இவற்றைக் கூறவில்லை. மாறாக சந்தேகத்தின் பெயரிலேயே கூறினார்கள்,//

    இல்ம் “கிடைக்கப் பெற்றது” இல்ம் “கிடைக்கப் பெறவில்லை” என்ற சகோ. மௌதூதியின் முரண்படும் வாசகங்கள், மேலுள்ள வாசகர்கள் மற்றும் நன்றாகத் தமிழ் தெரிந்த பன்டிதர்களுக்கும் இந்த முரண்பாடு தெரியாமல் போனது ஏன்? இது முரண்பாடாகத் தெரியவில்லையா?

    அடுத்து அனானி சகோ.nanban

    //இப்போது அவர்களின் மாமிசம் கொத்தப்படுகிறது!//

    இது தங்களின் மார்க்க அறிவின் தவறான புரிதலாகும். நீங்கள் கூறுவது போன்று விளங்குவதாக இருப்பின், பிர்அவ்ன், அபூலஹப், போன்றோரின் மாமிசங்கள், உலகிலுள்ள அனைத்து முஸ்லீம்களாலும் இத்தவரைக்கும் கொத்தப் படுகிறது என்று பொருளாகி விடும்.
    (இன்னும் சொல்லப் போனால் ஹதீஸ்களை தரப் படுத்தும் போது, ஹதீஸ்களை அறிவிப்பவர்களின் சுய வாழ்வு குறித்து ஆய்வு செய்ததும் மாமிசங்கள் கொத்தப் பட்டது என்ற கருத்தில் அமைந்து விடும்).
    புறம் இரு வகையைச் சார்ந்தது என்பது ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது புரியும்.
    எனவே, அனானி சகோதரரின் புரிதல் தவறானது என்பது தெளிவானதே! ஏனெனில், மறைந்த சகோ. மௌதூதி அவர்களின் சொந்த விவகாரங்கள் குறித்து இங்கு பேசப் படவில்லை.(அதுதான் புறம்) மார்க்க விசயத்தில் அவரின் தவறான கருத்துக்கள் குறித்து அலசப் படுவது என்பது, இம்மார்க்கத்தைப் பாதுகாப்பது என்பதுதான் பொருளாகும். இது மாமிசம் கொத்தப் படுவதில் சேராது.

    அடுத்து இருதியாக வந்த அனானி சகோதரர், //உங்களுக்கு தமிழ் விளங்குதுதானே! கண்ணை திறந்து முழுசா கட்டுரைய ஒரு தடவை வாசிங்க! வாசிச்சிருந்தா நிச்சயமாக சித்த சுவாதீனமுள்ள ஒருவர் ஒரு நாளும், "இதில் உள்ளவர் தஜ்ஜாலின் வருகையை மறுக்கிறார்" என்று சொல்ல மாட்டார்..!//

    தயவு செய்து நான் எடுத்துக் காட்டியுள்ள முரண்பாட்டை வாசியுங்கள். அது தங்களுக்குப் விளங்காது எனின், நிச்சயமாக சித்த சுவாதீனமுள்ள? தாங்களிடம்தான் ஏதோ ஒரு கோளாறு உள்ளது என்று பொருள்.

    //உங்களுக்கு றஸ்மின் இலும், mujahid இலும் உள்ள பக்தியில் எதையாவது சொல்லி, (குட்டு வெளிப்பட்டுவிட்டதால்) உள்ளத்திலுள்ள எரிச்சலை தீர்த்துக்கொள்ள பார்க்காதீர்கள்!//

    அனானி சகோதரரே! தவறான எண்ணங்களை களைந்து விடுங்கள். மௌதூதியின் ஓரிரு விசயங்கள் மாத்திரம் அலசப் படுகிறது எனில், ஏராளமான விசயங்கள் ஏற்கத் தக்கவை என்பதுதான் அதன் யதார்த்தம். இங்கு இது விசயத்தில் அவரின் தவறான விளக்கம், குர்ஆனுக்கும் ஏனைய நபிமொழிகளுக்கும் முரண்பாடாக இருப்பதனால்தான் இது போன்ற விமர்சனங்கள் கிளம்புகிறது. எனவே இதனை விமர்சிக்கப் புகும் போது முஜாஹித்தையும் றஸ்மினையும் குறிப்பிடுகிறீர்கள். இது விசயத்தில் அவர்களை விட நம் யாவருக்கும் கடமையுள்ளது. அவாகள் தவறாகக் கூறினாலும் இது போன்ற விமர்சனங்கள் அவர்களையும் நோக்கிச் செல்லும் என்பது திண்ணம். (இதர்க்கு இஸ்மாஈல் ஸலபீ, பீ ஜே எழுத்து விவாதங்கள் உதாரணம்.) எவர் தவறு செய்தாலும் இயக்க, அமைப்பு கௌரவம் போகும் என்ற பாகுபாடு, வேண்டுமெனில் உங்கள் இயக்கங்களில் இருக்கலாம். ஆனால் இங்கு அந்த வியைளாட்டு கிடையாது. குட்டு வெளிப்பட்டது மௌதூதியின் கருத்திலேதான். புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

    // உண்மையிலேயே அல்லாஹ்வையும் ரசூலையும் நம்புகிறவர்களாக இருந்தால் தௌபா செய்து அவதூறிலிருந்து விலகிக்கொள்ளுங்கள்//
    எது அவதூறு எது விமர்சனம் என்பதை முதலில் படித்து விட்டு வாருங்கள் அதன் பின் தொருடவோம். மார்க்க விசயத்தில் இந்தளவு 0 வாக இருப்பது, மார்க்க விசயத்தில் தங்கள் போன்றோரின் ஆர்வ இலட்சணங்களை வெளிப் படுத்துகிறது.

    சத்திய மார்க்கத்தை சத்தயத்தோடு கூடுதல் குறை வின்றி விளங்குவோமாக! (ஆமீன்)

    நன்றி
    அன்ஸார்

    பதிலளிநீக்கு
  13. அன்சார் நீங்கள் அனுப்பிய 02 கருத்துரைகளும் ஒரே விடயத்தை சுட்டிக் காட்டியதால்தான் அதில் ஒன்றை மட்டும் வெளியிட்டேன்...இங்கு மௌலானா நபிகளாரின் ஹதீஸை சந்தேகம் என்று சொல்லவரவில்லை. நபி அவர்கள் குறிப்பிட்ட விடயம் - வஹியா என்பது பற்றியே. நாம் எமது கட்டுரையிலும் நபிகளாருக்கு தஜ்ஜால் பற்றிய வஹியின் அடிப்படையில் கிடைத்த அறிவைக் கொண்டு அப்பண்புகள் வெளிப்பட்ட சிலரை தஜ்ஜாலாக இருக்குமோ என்று சந்தேகப்பட்ட விடயத்தை விளக்கினோம். நபிகளாரின் இந்த சந்தேகம், அவர்களின் அனுமானம் சரியானதாக அமையவில்லை. ஏனெனில் அது வஹியின் அறிவைக் கொண்டு கூறப்பட்டதல்ல. மாற்றமாக நபிகளாரின் ஊகம் என்பதனால் என்பதை திரும்பத் திரும்பத் திரும்ப உரைத்தும் உங்களுக்குப் புரியவில்லை என்றால் என்ன செய்வது?

    மௌலானாவின் கட்டுரையை மொழி பெயர்த்தவர் கையாண்ட சில சொற்களே நீங்கள் கருத்தைத் தவறாகப் புரியக் காரணம் என நினைக்கிறேன். ஆனால் முழுமையாக வாசிக்கும் போது மௌலானா சொல்ல வரும் கருத்து தவறாகப் புரிய சாத்தியமும் இல்லை. மௌலானாவின் முதற் கட்டுரையை முடியுமென்றால் الإسلام في مواجهة التحديات المعاصرة என்ற நூலில் வாசியுங்கள். (பக்கம் : 275) தெளிவு பெறுவீர்கள். இந்த நூலின் பெயரை கூகுள் தேடலில் இட்டு இலவசமாக பதிவிறக்கம் செய்த கொள்ள முடியும்.

    பதிலளிநீக்கு
  14. Dear Br.Ansaar
    1/2
    \\ தஜ்ஜால் எங்கோ இருக்கிறான் என்பதைதான் நான் கதை என்றேன். இதைத் தவிர மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தப் போகும் தஜ்ஜால் வெளிப்பட உள்ள செய்தியையே நானும் சார்ந்துள்ளேன். அத்துடன் எப்போதும் என் தொழுகையில் 'மஸீஹூத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்' என்ற துஆவை ஓதி வருகின்றேன்.

    தஜ்ஜால் பற்றிக் கூறப்பட்டுள்ள நபி (ஸல்) அவர்களின் அனைத்து நபிமொழிகளையும் ஒட்டுமொத்தமாக பார்வையிடும் போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பெரும் பொய்யன் தோன்ற இருக்கிறான், அவனின் குணங்கள் இவ்வாறெல்லாம் இருக்கும், அவன் சில தனித் தன்மைகளைப் பெற்றிருப்பான் என்கின்ற இல்ம் கிடைத்திருக்கின்றது என்பது தெளிவு. எனினும் அவன் எப்போது தோன்றுவான், எங்கே தோன்றுவான், நபியின் காலத்திலேயே பிறந்துவிட்டானா? அல்லது நபியின் காலத்திற்குப் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தோன்றுவானா? போன்றவை நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை'\\

    ********************************************
    \\குறிப்பிட்ட ஹதீஸ்களை நீங்கள் ஞாபகப்படுத்திப் பார்த்தீர்கள் என்றால் தஜ்ஜால் என்பவன் யஹூதிகளிலிருந்து தோன்றுவான் என்பதையும், அவன் எழுபதினாயிரம் பேருடன் சிரியாவுக்குள் நுழைந்து தமஸ்கஸ் வரை முன்னேறுவான் என்பதையும், அது சமயம் ஈஸா "அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்குவார்கள் என்பதையும், அவர்களைக் கண்ட தஜ்ஜால் இஸ்ரேல் நோக்கி விரண்டோடுவான் என்பதையும், அல்-லித் எனும் இடத்தில் அவன் கொல்லப்படுவான் என்பதையும் நீங்கள் சந்தேகமின்றி புரிந்து கொள்வீர்கள்"' (தப்ஹீமுல் குர்ஆன் - சூறதுல் அஹ்சாப் - அரபுப் பதிப்பு – பக்கம் : 78)\\
    *********************************************
    இப்படிச் சொன்னவரை,
    "இவர் தஜ்ஜாலின் வருகையை மறுக்குறார் என்று சொல்!" என்கிறீர்கள்...

    இப்படிச் சொன்னவரை,
    "இவர் தஜ்ஜாலின் வருகையை மறுக்குறார் என்று சொல்!" என்கிறீர்கள்...
    அப்படி சொல்லாவிட்டால் நீ மௌதூதியின் பக்தன் என்கிறீர்கள்....
    உங்களுக்காக என்னை மனசாட்சிக்கு முரணாக பொய் சொல்லச் சொல்கிறீர்களா?

    உண்மையில் இந்த அர்டிகால் ஐ நான் 5 முறைக்கும் மேல் படித்துவிட்டேன்... இதன் கருத்து எனக்கு 100 வீதம் தெளிவாகப்ப் புரிகிறது..
    1 . "அல்லாஹ்வின் தூதர் தஜ்ஜாலை - அவன் வருகையை மறுக்கவில்லை அதே கருத்தையே நானும் சார்ந்திருக்கிறேன்." என்கிறார்
    2 . தஜ்ஜால் எங்கு தோன்றுவான் என்பது பற்றி வித்தியாசமான அறிவிப்புகளை ரசூலுல்லாஹ் வழங்கியுள்ளார்கள்! அதில் எந்த இடம் அவன் தோன்றப்போகும் இடம் என்பது எமக்கு தெரியாது ரசூலுள்ளஹ்வும் அதனை ஒரு இடமாக கூறாதததால் அவர்களும் அதுபற்றிய தேடலில் இருந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது... வருவான் என்கிற வஹி அவர்களுக்க் கிடைத்திருக்கிறது... அது எங்கு என்பது அறிவிக்கப்படாமல் இருந்திருக்கலாம் ( இந்த இடம் பற்றிய விடயத்தை தான் நீங்கள் தஜ்ஜால் வரமாட்டான் என்கிறார், அவதூறு சொல்கிறார் என்று கணிக்கிறீர்கள்..)

    பதிலளிநீக்கு
  15. 2/2
    உங்களைப்போல நானும் அல்லாஹ்வையும் ரசூலையும் எனது தயையும் விட நேசிக்கின்றேன்..
    இந்த உலகில் சில மனிதர்களை திருப்திப்படுத்தி இந்த வெறும் அடிமையால் எதனை சம்பாதித்துக்கொள்ள முடியும்?
    சத்தியமாக குரானும் சுன்னாவும் தவிர இன்னொன்றுக்கு எமது இதயத்தில் இடமில்லை.. இன்னும் மேலாக அந்த குரானும் சுன்னாவும் அல்லாஹ்வின் தூதர் எப்படி பயன்படுத்தினார்கள் என்ற சீரா வைக்கூட நங்கள் விட்டுவிடவில்லை!

    அல்லாஹ்வின் தீனுக்காக இரவுபகலாய் உங்களது இயக்கத்தில் யாராவது வேலை செய்தால் உங்களுக்கு இயல்பாகவே ஒரு பாசம் வரும்... அதனை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் அதனது அர்த்தம் அவர்மீது பக்தி என்பதல்ல அல்லாஹ்வையும் ரசூலையும் விட ஓர் அங்குலம் கூட அது உயரமுடியாது!!

    உங்களையும் என்னையும் விட இரவுபகலாய் இலட்சிய வேட்கையோடு அல்லாஹ்வின் தீனுக்காக உழைத்த ஒரு சகோதரன்
    மரணத்தை துச்சமாக மதித்த ஒரு அல்லாஹ்வின் ஊழியன்.. அவ்வளவுதான்...
    நீங்கள் மரணித்துவிட்டால் நீங்கள் நினைக்காத ஒன்றை நீங்கள் எழுதியதாக ஒருவர் அர்த்தப்படுத்தினால் அதை பார்த்துக்கொண்டிருத்தலை அலலாஹ் அனுமதிப்பான?
    உங்களை முழுமையாக விளங்கியவர் சொல்லுவார் "அன்சார்... அவரோடு நான் இருந்திருக்கிறேன் வாழ்ந்திருக்கிறேன் அவர் ஒருநாளும் அல்லாஹ்வின் தூதருக்கு அவதூறு சொன்னவர் அல்ல.. இதற்கு சாட்சியாய் அவர் எழுதிய இந்த இந்த புத்தகங்களை பாருங்கள்" என்பார்..

    நீங்கள் மௌதூதி என்பவரது பல புத்தகங்களை வாசித்துப்பாருங்கள்... ஷிர்க், பிதுஅத், அனாச்சாரங்கள் தாயத்து தொடக்கம்...
    ஒரு தேசத்தை வழிநடாத்துவது வரை... இறுதி நபித்துவம் என்ற புத்தகத்தை பாருங்கள்... இவரைய இப்ப்டிச்சொன்னோம் என்று உங்களுக்குத் தோன்றும்...

    உண்மையில் நீங்கள் விளங்குவது வேறாக இருந்தால் இதனை விளங்கப்படுத்த ஆற்றல் இல்லாதவனாக என்னை நான் காண்கிறேன்...
    விரல்களுக்கு அப்பால் இதனை என் இதயத்தால் நான் எழுதுகிறேன்.. மறுமையில் அலலாஹ் எமக்கு தெளிவு படுத்தட்டும்..
    உங்களது துஆக்களில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்..
    ஜசாக்கல்லாஹ்

    பதிலளிநீக்கு
  16. அஸ்ஸலாமு அழைக்கும்,
    "தஜ்ஜாலின் வருகையை மறுக்கும் மவ்தூதி" என்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட கட்டுரை நடுநிலை வாதிகளின் பார்வையில் பிழையானதே.ஆனால் ஒருவர் மீது அவதூறு என்ற பார்வையில் அந்த கட்டுரை வெளியிட படவில்லை என்பது நிச்சயம்.ரச்மின் misc என்ற தவ்ஹீத் மவ்லவி தன்னுடைய பிழையை திருத்தி பகிரங்கமாக வைக்க பட்ட அந்த கட்டுரையை பிழை என்று ஏற்றுக் கொண்டு அதற்கு மற்று கட்டுரை வெளியிடுவது தான் அவர் செய்யும் உண்மையான அழைப்பு பனி.அதை அவர் செய்வாரா மாட்டாரா என்பது அவரின் இறை அச்சத்தை பொறுத்தே முடிவு செய்யப்படும் பொறுத்திருப்போம்.
    ஜமாத்தே இஸ்லாமி சஹோதர்களே இமாம் மவ்தூதியின் மேல் வைத்திருக்கும் உங்கள் அன்பு தஜ்ஜால் விடயமாக வெளிப்பட்டது போல் ஏன் அதே அழைப்பு மாத இதழில் வெளியான யூசுப் அல் கர்ழாவி அவர்கள் பற்றி veliyaana "பெண்களுடன் கைகுலுக்கும் கர்ழாவி தூண்டியது மார்க்கமா மனோ இச்சையா" என்ற ஆக்கத்துக்கு யூசுப் கர்ளாவி மீது உங்கள் அன்பு பாசம் ஏன் வெளியாகவில்லை.ஒரு பிரபல்யமான ஆலிம் இவ்வாறு பகிரங்கமாக செய்யும் பொழுது அதை பகிரங்கமாகவே சுட்டிக்காட்டுவது அவர் தன தப்பை திருத்தி கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் அவ்வாறு இல்லாமல் அவர்மீது கொண்ட கால்புனர்வோ பொறாமையோ கிடையாது இது விடயமாக ஜமாத்தே இஸ்லாமி சஹோதரர்களின் மறுப்பிருந்தால் வெளியிடவும் .இல்லாவிட்டால் இதுவும் அவதூறு என்றால் அதை பகிரங்கமாக தெளிவுபடுத்தவும்?.

    பதிலளிநீக்கு
  17. சகோ: அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் கருத்துக்கு ஜஸாகுமுல்லாஹூ கைரன். முதலில் இந்தக் கட்டுரை ஜமாஅத்தே இஸ்லாமியால் உத்தியோபூர்வமாக எழுதப்பபட்டதல்ல என்பதையும், தனிப்பட்ட வகையில் எழுதப்பட்டது என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன். இந்த பதில் ஜமாஅத்தே இஸ்லாமியின் ஸ்தாபகர் என்ற வகையில் மௌலானாவை பாதுகாக்கும் நோக்கிலன்றி, ஒரு அறிஞர் - அதுவும் நான் எனது ஆய்வுக்குக்காகத் தெரிவு செய்த அறிஞர் என்ற வகையிலேயே இந்த மறுப்பு எழுதப்பட்டது.

    ஷேய்க் யூஸூப் அல்-கர்ளாவி தொடர்பான விடயத்திற்கு ஜமாஅத்தே இஸ்லாமி பதில் சொல்லியாக வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லை. ஏனெனில் அவரது செயலை பின்பற்றி ஜமாஅத்தே இஸ்லாமி எங்காவது பெண்களுடன் கைகுலுக்கி இருந்தால், அல்லது அதை ஆதாரம் காட்டி கைகுலுக்க முடீயம் என்று சொல்லியிருந்தால் உங்கள் எதிர்பார்ப்பு நியாயமானதே.

    அடுத்து, ஷேய்க் கர்ளாவி இன்னும் உயிரோடு இருப்பவர் என்ற வகையில் அவர் பற்றிய விமர்சனங்களுக்கு பதில் கூற வேண்டியது அவரது பொறுப்பே. ஆனால் மரணித்த அறிஞர்கள் தொடர்பில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்ற போது அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டியது உயிர் வாழும் அறிஞர்களின் பொறுப்பாகும். இந்த வகையில்தான் மௌலானா மௌதூதி தொடர்பான மறுப்பு எழுதப்பட்டது.

    பதிலளிநீக்கு
  18. Dear Br.Ismath,
    Please dont allow to post links in comments.
    because, we are answerable to allah not only for the current releases of the(linked)site... but also in future...
    They can post any unislamic articles in the future... this links will guide them towards bad thinks
    Jazakallah

    பதிலளிநீக்கு