-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது

16 ஜூன், 2014

வன்முறைகளுக்குப் பின்....எமது பணி.

இஸ்மத் அலி
வன்முறைகளுக்குப் பின்....எமது பணி.



சிங்கள இனவாதப் பிசாசுகள் மிக நீண்ட நாட்களாய் தாம் எதிர்பார்த்ததை சாதித்து முடித்துள்ளன. அரசாங்கத்தின் ஆதரவோடு ஏழு உயிர்களையும் கோடிக்கணக்கான சொத்துக்களையும் வீடுகளையும் இறையில்லங்களையும் அழித்து கொஞ்சம் ஓய்வெடுத்திருக்கிறது. 

இந்த அரக்கத்தனத்தை தணிப்பதற்கு முஸ்லிம் தலைமைகள், அமைப்புக்கள் என்பன அயராது பாடுபட வேண்டியிருந்தது. 

கொசு கடித்தாலும் அதில் தலையீடு செய்யும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொதுபல சேனாவின் செவிலித் தாய் கோத்தாபய இது பற்றி இது வரை எதுவும் வாய்த் திறக்கவில்லை.

இப்போது பிரச்சினைகள் தணிந்திருக்கின்றன. ஏனைய பகுதிகளுக்கு பரவலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட அச்சங்கள் குறைந்திருக்கின்றன. என்றாலும் எந்த உத்தரவாதமும் இல்லை என்றே பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர். 

எமது முதல் பணி :

பாதிக்கப்பட்டவர்களின் உடனடி உணவு, தங்குமிட, மருத்துவ வசதிகளை கவனித்தல்.
பாதிப்புக்கள் குறித்த சரியான கணிப்பீட்டை மேற்கொள்ளல். 
பாதிப்புக்களை ஈடுசெய்ய உதவிசெய்து ஆறுதல் அளித்தல். 
அல்லாஹூத்தஆலா மீதான நம்பிக்கை, அவனுடனான தொடர்பு  என்பவற்றின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் உள்ளங்களைப் பலப்படுத்தவும், அமைதியடையச் செய்யவும் வழிகாட்டல். 

சட்ட ரீதியான நடவடிக்கைகள் :

இப்பிரச்சினைகளுக்கு பின்புலமாய் இருந்தவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் வரை நாம் ஓயக்கூடாது. குறிப்பாக ஞானசார கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் அழுத்தங்களும் சர்வதேச ரீதியாக முன்வைக்கப்பட வேண்டும். பொதுபலசேனா அமைப்பு தடைசெய்யப்படும் வரை நாம் எமது போராட்டத்தை ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், வெளிநாட்டு அழுத்தங்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் அவன் விரும்பிய போதெல்லாம் குட்டி விட்டு சண்டித்தனம் செய்கின்ற நிலையே நீடிக்கும். 
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நட்டஈட்டை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொடுக்க முயற்சித்தல். 

இன உறவைக் கட்டியெழுப்பல் 

பொதுவாக அனைத்து ஊர்களிலும் குறிப்பாக சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளிலும் பாதிப்படைந்துள்ள இன உறவைக் கட்டியெழுப்ப முயற்சித்தல். ஏனெனில் குறிப்பிட்ட நிகழ்வுகளினால் ஏற்பட்டுள்ள மனக் கசப்புகள் இத்தகைய நிகழ்வுகள் தொடர் சங்கிலியான பிரச்சினைகளை ஏற்படுத்திவிடாமல் இருக்க வேண்டும். 

சிந்திக்க வேண்டியது :

எமது முஸ்லிம் ஊர்களின் பாதுகாப்புக் குறித்தும் இத்தகைய முறுகல்களின் போது நாம் செயற்பட வேண்டிய முறை பற்றியும்  பொறிமுறையொன்றை மிக அவசரமாக தயாரிப்பதும் அதனை தெளிவுபடுத்தலும். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக